Posts

Image
  மறக்க முடியுமா ? 2 நான் விமர்சனம் எழுதிய முதல் திரைப்படம் - சித்ரா லட்சுமணன் தெள்ளூர் தருமராசனின் கடையில் பம்புசெட்டை கடனில் வாங்கிய பல விவசாயிகளிடம் அந்தக் கடனை வசூலிப்பதற்காக நானும் அவரும் சைக்கிளில் போவது வழக்கம். அப்படி பல நாட்கள் பயணம் செய்ததில்  அவரோடு எனக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்ட து. விரைவில் சென்னைக்கு சென்று பத்திரிக்கை ஒன்றை ஆரம்பிக்கவிருப்பதாகச்  சொன்ன அவர் சென்னைக்கு சென்றபோது என்னையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். அப்போது கதாசிரியர் மா.ரா அவர்கள் ஜெய்சங்கர்-கே.ஆர்.விஜயா ஜோடியாக நடிக்க தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனரான கே எஸ் சேதுமாதவன் இயக்கத்திலே பால்மனம் என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார். பால்மனம் படத்திலும்  பாடல்கள் எழுத தருமராசனுக்கு வாய்ப்பு தந்திருந்தார் மா.ரா.  அந்தப் பாடல்களுக்கு   இசையமைத்தவர் பார்த்தசாரதி.இவர்தான் எண்பதுகளின் இறுதியில் எக்கோ என்ற இசை நிறுவனத்தின் மூலம் இளையராஜாவின் பாடல்கள் அனைத்தையும் வெளியிட்டவர்.  மா.ரா.அவர்களின்  அலுவலகம் அப்போது தியாகராய நகர் ஹபிபுல்லா சா...
Image
மறக்க முடியுமா? 1 -சித்ரா லட்சுமணன் எல்லா நதிகளையும்  போல மனிதனின் வாழ்க்கையும் ஒரு புள்ளியில்தான் தொடங்குகிறது. அந்தப் புள்ளி  எப்படி மாறினாலும் மறக்க முடியாத பல அனுபவங்களை அது விதைத்துவிட்டுப் போகிறது என்பது மட்டும் உண்மை.    ஆரணி என்ற  ஊரில் ஒரு பம்புசெட் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நான் ஒரு பத்திரிகையாளனாகவும், திரைப்படத் தயாரிப்பாளனாகவும், இயக்குனராகவும்,நடிகனாகவும் உருவெடுப்பேன் என்று கனவு கூட கண்டதில்லை.ஆனாலும் இவைகள் எல்லாம் என் வாழ்வில் நடைபெற்றன. இந்த  மாற்றங்களைப் பெற்ற போது நான் சந்தித்த மனிதர்கள், எனக்குக் கிடைத்த  அனுபவங்கள்,அவமானங்கள் எல்லாமே  மறக்க முடியாதவை. அந்த அனுபவங்களைத்தான் வாரம் தோறும் தினமலர் வாசகர்களாகிய உங்களோடு மறக்க முடியுமா என்ற தலைப்பில்  பகிர்ந்துகொள்ள இருக்கிறேன் சினிமாவோடு எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு குடும்பம் என்னுடைய குடும்பம். என்னுடைய தந்தை ராமசாமி ஒரு பள்ளி ஆசிரியர். என் தாயார் சீதாலட்சுமி  படிப்பு வாசனை இல்லாத குடும்பத் தலைவி. மூத்த சகோதரரான கிருஷ்ணமூர்த்தி  காவல்...
Image
சிவாஜி இந்தியத் திரைவானின் துருவ நட்சத்திரம் - சித்ரா லட்சுமணன்  1952 ஆம் ஆண்டில் தீபாவளி கொண்டாடிய தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் யாருக்கும் அப்போது தெரியாது -அந்த வருடத்து தீபாவளிக்கு மிகப் பெரிய சிறப்பை சேர்க்க ஒரு நடிகர் வரப் போகிறார் என்று. அந்த தீபாவளியன்று எல்லா ரசிகர்களையும் தன்னுடைய அபரிமிதமான நடிப்பாற்றலால் திரும்பிப்பார்க்க வைத்த அந்த  நடிகரின் பெயர் சிவாஜி கணேசன். அவர் நடித்த முதல் திரைப்படமான பராசக்தி தீபாவளியன்றுதான் திரைக்கு வந்தது ஒரு நடிகனைப் பொறுத்தவரை முதல் படத்திலேயே கதாநாயகனாக நடிக்கக்கூடிய வாய்ப்பு அமைவது என்பது  மிகப் பெரிய விஷயம். அந்த வாய்ப்பு சில கதாநாயகர்களுக்குக் கிடைத்திருக்கிறது என்றாலும் அதில் எத்தனை பேர் முதல் படத்திலேயே தாங்கள் யார் என்பதை நிரூபித்திருக் கிறார்கள், எத்தனை பேர் முதல் படத்திலேயே வெற்றிக் கோட்டைத் தொட்டிருக்கிறார்கள் என்று கணக்கிட்டுப் பார்த்தால் அப்படிப்பட்ட வர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். முதல் படத்திலேயே தன்னை அடையாளம் காட்டிக் கொண்டது மட்டுமின்றி மிகப் பெரிய வெற்றியைக் குவித்த மிகச்சில நடிகர்களி...
Image
கலைஞரைக் காதலித்த கவியரசர் கண்ணதாசன்   – சித்ரா லட்சுமணன் அபிமன்யு படத்தில் எம்.ஜி.ஆர். மாடர்ன் தியேட்டர்ஸ்  நடத்திக் கொண்டிருந்த “சண்ட மாருதம்” என்ற பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றச் சென்றபோதுதான்  அந்த நிறுவனத்தோடு கவிஞர் கண்ணதாசனுக்கு முதல் முதலாக தொடர்பு ஏற்பட்டது   சேலத்திலே சண்டமாருதம்  பத்திரிகையில் பணியாற்றிய போது முதன் முதலாக நாவலர் நெடுஞ்செழியனைப்  பார்க்கவும் அவரது பேச்சைக் கேட்கவும் கண்ணதாசனுக்கு வாய்ப்பு கிடைத்தது.  ஒரு கூட்டத்திலே பேசிய நெடுஞ்செழியனின் பேச்சு அவரைப் பெரிதும் கவர்ந்தது. அதற்குப் பிறகு நேரடியாக இல்லை என்றாலும் ஒரு விதத்தில் சண்டமாருதம் பத்திரிகையில் கண்ணதாசன் தனது வேலையை இழப்பதற்கும் அந்த பத்திரிகையே  மூடப்படுவதற்கும் நெடுஞ்செழியன் காரணமாக அமைந்தார் நாவலர் நெடுஞ்செழியன் எழுதியிருந்த கட்டுரை ஒன்று அப்போது ஒரு பத்திரிகையில் வெளிவந்திருந்தது அந்தக் கட்டுரை கண்ணதாசனை மிகவும் கவர்ந்ததால் அதை சண்டமாருதம் பத்திரிகையில் மறுபிரசுரம் செய்ய விரும்பிய அவர் அச்சுக் கோப்பவரிடம் அந்த கட்டுரையை வெட்ட...