சிந்திக்க சில விஷயங்கள்

கும்பகோணத்தில் 83 பிஞ்சு உள்ளங்களை தீயின் கோர நாக்குக்கு பலி கொடுத்த பிறகுதான் ஓலைக்கூரைகள் எத்தனை ஆபத்தானவை என்ற விழிப்புணர்வு நமக்கும் அரசுக்கும் வருகிறது.

மாண்புமிகு முதல்வர் அவர்களது வீட்டிலேயே ஓலைக்கூரை அகற்றப்பட்டு ஓடுகள் பொறுத்தப்பட்டது கும்பகோணம் சோகத்துக்குப்பிறகுதான். என்ன காரணத்தோலோ விபரீதமாக ஏதாவது நடந்த பிறகே அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மெத்தனப்போக்கை அரசும் அரசு அதிகாரிகளும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.

ரங்கநாதன் தெருவை அங்குள்ள கடைக்காரர்கள் அத்துமீறி ஆக்ரமித்திருப்பதை நாம் அறிந்து கொள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் தீப்பிடித்து எரிய வேண்டியுள்ளது-அதில் சில தொழிலாளர்கள் உடல் கருக வேண்டியுள்ளது.

பொதுமக்களுக்கு ஏற்கனவே பெட்ரோல் விலை உயர்வு, அரிசி விலை உயர்வு, பருப்பு விலை உயர்வு என்று ஏகப்பட்ட கவலைகள். ஆகவே இது போன்ற விஷயங்களுக்காக கொடி பிடிக்கவில்லையே என்று அவர்களைப் பார்த்து கோபப்படுவதில் அர்த்தமில்லை.

இந்த சூழ்நிலையில் “வருமுன் காப்போம்” என்ற அடிப்படையில் அரசு கவனம் செலுத்த வேண்டிய சில அதிரடி விஷயங்கள் குறித்து கீழே பட்டியலிட்டுள்ளேன்.

அரசின் கவனத்திற்கு

பிரச்னை 1.

”சென்னையில் உள்ள நகைக்கடைகளில் இரண்டைத்தவிர மற்ற கடைகளில் விற்கப்படும் தங்கம் கலப்படத் தங்கம்” என்று ஒரு பண்பலை அலைவரிசை ஒரு நாள் முழுவதும் உரக்கச் சொன்னது.

தங்கம் விற்கும் நகைக்கடைகளை அடிக்கடி சோதனை செய்து அவைகளைத் தரக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் விதத்தில் நடவடிக்கை

எடுக்க விடாமல் அரசு நிர்வாகத்தைத் தடுப்பது எது?

பிரச்னை 2

பள்ளிகள் தங்களது மாணவர்களை அழைத்து வருவதற்காக ஏற்பாடு செய்துள்ள அனைத்து பேருந்து மற்றும் வேன்களில் மாணவர்கள் ஆட்டு மந்தைகள் போல் அடைக்கப் படுகின்றனர். ஒரு வேனுக்கு இவ்வளவு

மாணவர்கள்தான் பயணிக்க வேண்டும் என்ற விதிமுறையை கட்டாயமாக நடைமுறைக்கு கொண்டு வருவதில் என்ன பிரச்னை?

பிரச்னை 3

பெருவாரியான தனியார் தொலைக்காட்சிகளில் காலை அல்லது இரவு வேளைகளில் யாராவது ஒரு தாடி வைத்த அல்லது வைக்காத ஒருவர் “மருத்துவர்’ என்று தன்னை சொல்லிக்கொண்டு எந்த மருத்துவராலும் தீர்க்க முடியாத அனைத்து வியாதிகளையும் தான் தீர்த்து வைப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இவர்கள் எல்லோரும் உண்மையான மருத்துவர்கள்தானா? இவர்களது சிகிச்சையால் யாராவது குணமடைந்திருக்கிறார்களா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டியது அரசின் கடமையில்லையா?

பிரச்னை 4

தமிழ்நாட்டில் உள்ள பல கோவில்களில் அர்ச்சகர்கள் பலர் கடவுளின் பெயரால் நடத்தும் வழிப்பறிக்கொள்ளைகளுக்குப் பயந்து ஆலயங்களுக்கு செல்வதற்கே மக்கள் பயப்படுகின்றனர். இவர்களிடம் அயல் நாட்டுக்காரர்களும், சுற்றுலா பயணிகளும் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.

இதற்கு ஒரு தீர்வு காண வேண்டியது அரசின் அத்தியாவசிய பணியில்லையா?

பிரச்னை 5

“சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள்” என்பது போன்று அரசு பெருந்து ஓட்டுந்ர்கள் எந்த விதிமுறைகளுக்கும் கட்டுப்படத்தேவையில்லை

என்கிற சலுகை அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.

பெரும்பாலான அரசு பேருந்துகள் ‘நோ எண்ட்ரி” களில் சர்வ சதாரணமாக செல்வதையும் எந்த சிக்னலையும் மதிக்காமல் போவதையும் கண்ணெதிரே பார்த்த பிறகும் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க காவல் துறை தயங்குவது ஏன்? அரசு பேருந்தை ஒட்டுபவரென்றால் அவர் எந்தத் தவறு செய்தாலும் அவருக்கு தண்டனை கிடையாதா?

Comments

  1. dear sir your observations are cent percent correct.but the government and itsadministration are engaged with more vital things such as free distribution of tv sets,gas stoves, 2 acre land, and all sort of activcities to make them beg for every thing .there is rules and regulations for every thing,but it is hardly followed.in case of any problem the concerned people do correct the concerned authorites and set it right.only disaters are awakening these governments.

    ReplyDelete
  2. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    எனது ப்ளாக்கில்:
    பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
    புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
    A2ZTV ASIA விடம் இருந்து.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog