Posts

Showing posts from May, 2017
Image
கங்கா கவுரி படப்பிடிப்பில் ஜெயகங்கா கவுரி படப்பிடிப்பில் ஜெயலலிதா சந்தித்த சோதனை மறக்க முடியுமா ? 6 கங்கா கவுரி படப்பிடிப்பில் ஜெயலலிதா சந்தித்த சோதனை - சித்ரா லட்சுமணன் " சித்ரா என்ற பெயர் உங்கள் பெயரோடு  எப்படி இணைந்தது" என்பது என்னை பொது நிகழ்ச்சிகளில் பார்க்கின்ற பலர் கேட்கும் கேள்வி . பல திரை நட்சத்திரங்கள் கூட இந்தக் கேள்வியை என்னிடம் பல முறை கேட்டிருக்கிறார்கள். அந்த பெயருக்குப் பின்னே  ஏதோ ஒரு காதல் கதை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு ஆர்வமாக கேள்வி கேட்கின்ற அவர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக "சித்ரா என்ற பெயரிலே எனக்கொரு காதலி இருந்தாள்.அவள் நினைவாகத்தான் அந்தப் பெயரை என் பெயரோடு இணைத்து வைத்துக் கொண்டேன்" என்று கூட பலரிடம் நான் சொல்லியிருக்கிறேன். ஆனால் அந்தப் பெயர் என் பெயரோடு இணைந்த கதையே வேறு, சித்ரா என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்த பெயர் என்பதால்  என்னுடைய நியூஸ் ஏஜென்சிக்கு "சித்ரா பப்ளிசிட்டீஸ்" என்று பெயர் வைத்திருந்தேன்.அதற்குப் பிறகு என்னை "சித்ரா பப்ளிசிடீஸ் லட்சுமணன்" என்று அழைக்க ஆரம்பித்த பல நண்பர்கள்  பி...
Image
மறக்க முடியுமா 5 வெள்ளித் திரையில் என் பெயர் முதன் முதலாக இடம் பெற்ற படம் -சித்ரா லட்சுமணன்  அப்போதெல்லாம் எல்லா அலுவலகங்களிலும் முக்கியமானவர்கள்  எல்லோருடைய அறையிலும்  ஒரு பாதி  கதவு போட்டிருப்பார்கள்.  அது  மாதிரி ஒரு  கதவு டைரக்டர் ஜி.ராமகிருஷ்ணன் அலுவலகத்திலும் போடப்பட்டிருந்தது. அந்த பாதி  கதவுக்குப் பின்னால் ரவிச்சந்திரனுடைய தலை தெரிந்ததால்தான் திடீரென தனது பேச்சை நிறுத்தி விட்டார் ராமகிருஷ்ணன். தினத்தந்தி நிருபரிடம் சொல்லி அப்படி ஒரு செய்தியை ரவிச்சந்திரன் வெளியிடச் சொன்னது உண்மைதான் என்ற போதிலும் நான் அதை வெளிப்படையாக இயக்குனர் ராமகிருஷ்ணனிடம் கூறியதில் அவருக்கு என் மீது லேசான வருத்தம் ஏற்பட்டது என்றாலும் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை. "சிநேகிதி" படத்தில்  இரண்டாவது கதாநாயகனாக ரவிச்சந்திரன் நடிப்பதற்கு  அவர் கையாண்ட அந்த உத்தி ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது என்றுதான் சொல்லவேண்டும்  பத்திரிகைகளில் ரவிச்சந்திரன் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துவிட்டதால் அவரை மாற்றவிரும்பாத ஜி.ராமகிருஷ்ணன் அவரை வைத்தே ப...
Image
மறக்க முடியுமா ? 4 என்னை பத்திரிகைத் தொடர்பாளராக அறிமுகப்படுத்திய இயக்குனர் - சித்ரா லட்சுமணன் நடிகை பாரதி பேட்டிக்காகத்  தயாராக இருந்த நிலையில் அவரைப் பேட்டி காண்பதற்காக ஜெயகாந்தனை அழைத்துச் செல்லச்  சென்றிருந்த என்னைப் பார்த்து “நான் எதற்கு அந்த நடிகையைப் பேட்டி காண வேண்டும்?அதனால் இந்த சமுதாயத்திற்கு என்ன பலன் ஏற்படப் போகிறது?”என்றெல்லாம் கேள்விகளை ஜெயகாந்தன் வரிசையாக அடுக்கியபோதே  அவருக்கு நான் என்ன பதில் சொன்னாலும் அன்றைய பேட்டி மட்டும் நடக்கப் போவதில்லை என்று  எனக்குத் தெளிவாகப் புரிந்தது.இருப்பினும் அதற்காக முயற்சி செய்யாமல் விட்டுவிட முடியுமா ? .அதனால் ஏறக்குறைய அரை மணி நேரம் அவருடன்  போராடினேன். இறுதியாக அவர் வரவே மாட்டார்  என்று தெரிந்ததும் பாரதியை  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அன்றைய நிகழ்ச்சி ரத்து என்பதை சொல்லிவிட்டு, நாவலாசிரியர் யார் என்பதை உறுதி செய்துவிட்டு மீண்டும் அவருடன் தொடர்பு கொள்வதாகக் கூறினேன். அடுத்து அப்போது ஆனந்த விகடனில் பணியாற்றிக் கொண்டிருந்த எழுத்தாளர் தாமரை மணாளனை தொடர்பு கொண்டு அந்த பேட்டியைப் பற்றி...
மறக்க முடியுமா? 3 நடிகையை பேட்டி காண மறுத்த ஜெயகாந்தன் -சித்ரா லட்சுமணன் ஆரணிக்குத் திரும்பிச் சென்ற பிறகு மீண்டும் நூல் நிலையத்தில் சில நாட்களை செலவிட்ட பிறகு அங்கே அமைந்திருந்த லஷ்மி சரஸ்வதி மில்லில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கே வேலை செய்து கொண்டிருக்கும்போது சென்னையில் நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது  என்றும். அப்படியிருக்கும்போது நான் ஆரணியில் இருப்பது சரியல்ல என்றும் ஏறக்குறைய தினமும் எனக்கு கடிதம் எழுதி சென்னைக்கு வந்துவிடும்படி அழைத்துக் கொண்டிருந்தார் விடிவெள்ளி பத்திரிகையிலே எனக்கு அறிமுகமான ஓவியரான எல்.ஜி.ராஜ். என் மேல் எனக்கிருந்த நம்பிக்கையை  விட அதிகமான நம்பிக்கை அவருக்கிருந்தது. எந்த வேலையும் இல்லாமல் சென்னைக்குச் சென்று என்ன செய்வது என்ன எண்ணத்தில் நான் இருந்ததால் அவர் தொடர்ந்து பல கடிதங்கள் எழுதியும் நான் ஆரணியை விட்டு கிளம்பவில்லை என் பிரச்னை என்ன என்பதை புரிந்து கொண்டவர் போல அடுத்து எனக்கு எழுதிய கடிதத்தில் எனக்காக சென்னையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு பற்றி தெளிவாக குறிப்பிட்டிருந்தார் ராஜ்.  சிங்கப்பூரில் இருந்து வந்திருக்க...