நண்பர்களே,
கல்லூரி மாணவன் ஒருவன் சாலை விபத்தில் இறந்தவுடன்தான் காரில் பெல்டபோட்டுக்கொண்டு போக வேண்டும் என்று வலியுறுத்தத்தொடங்குகிறதுகாவல் துறை.இதையெல்லாம் வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் ஏன் செயல் படுததக்கூடாது?
வருமுன் காக்க வேண்டியவைகளின் பட்டியல் கீழே:
* பள்ளி பிள்ளைகளை ஏற்றி வரும் வேன்களில் அளவுக்கதிகமாக பிள்ளைகளை
அடைப்பது
* அரசு பஸ்களின் ஓட்டுனர்கள் எந்த சிக்னலையும் மதிக்காமல்
பஸ்களைஓட்டுவது
* விளம்பர பேனர்களை ஒழித்து விட்டதாக மார் தட்டிக்கொள்ளும் சென்னை மாநகராட்சி அரசியல் வாதிகள் மட்டும் தெருமுனைக்கு தெருமுனை பல்லை இளித்துக் கொண்டிருப்பதை கண்டும் காணாமல் இருப்பது
இன்னும் தொடரும்
Dear Chithra Sir,
ReplyDeleteஉங்கள் BLOG முயற்சி போற்றுதலுக்குறியது.
-நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல எல்லா பாதுகாப்பு முயற்சிகளும் எடுக்கப்பட்டிருப்பதாக அரசு மார்தட்டிக்கொள்ளலாம். ஆனால் நடைமுறையில் யாராலும் அவை கடைபிடிக்கப்படவில்லை. அளவுக்கு அதிகமாக பள்ளிச்சிறுவர்களை ஏற்றிச்செல்வதை வேன் டிரைவர்களே தவிர்க்கவேண்டும். அப்படியே ஏற்றிச்சென்றால்கூட போலீஸ்காரரிடம் மாட்டினால் வழக்கமாக அழுவதை அழுதுவிட்டு தப்பித்துவிடலாம் என்கிற எண்ணம்தான் அவர்களிடம் இருக்கிறது.சமீபத்தில் செல்போன் பேசிக்கொண்டே ஓட்டுநர் ஒருவன் வேன் ஓட்டிக்கொண்டு சென்றதால் எத்தனை சின்னஞ்சிறிய குழந்தைகளை நாம் இழக்க நேர்ந்தது!
-அரசு ஓட்டுநர்களோ தாங்கள் NASA வில் வேலைபார்ப்பதாக நினைத்துக்கொண்டு மெத்தனமாக ஓட்டுவதால் கடமை உணர்வு கழந்துவிடுகிறது.
-அரசியல்வாதிகளை கேட்கவே வேண்டாம்.
---இதையெல்லாம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டுமென்றால் பொதுமக்கள் நினைத்தால் மட்டுமே முடியும். முதலில் அவர்கள் நாட்டினை நேசிக்கவேண்டும். விதிமுறைகளை மதிக்கவேணும்.
அதிகமாக குழந்தைகளை ஏற்றும் வேன்களை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது.....விதிகளை மீறும் அரசு ஓட்டுநர்களைப்பற்றி மேலிடத்தில் புகார் செய்யவேண்டும்..
--அரசியல் வாதிகளுக்கு பாடம்புகட்ட ஒரேவழி தேர்தலில் அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதுதான்.
Dominic Ancelm
Saudi Arabia
dompower3d@gmail.com
www.deevista.com
Dear chitra
ReplyDeleteFirst of all hats off to you guys in the cinema industry - it is you who are really caring and condoling than the others in different traits, you guys can feel the abnormal, you guys can fight and people will hear your voices, you guys can stand for the right since you are cautious that others have to hear you on the screen. Keep it up and we will be inspired to follow.
கரெக்டா சொன்னீங்க சார்.. இன்னும் நிறைய இருக்கு..:)
ReplyDelete