Posts

Showing posts from 2010
சிந்திக்க சில விஷயங்கள் கும்பகோணத்தில் 83 பிஞ்சு உள்ளங்களை தீயின் கோர நாக்குக்கு பலி கொடுத்த பிறகுதான் ஓலைக்கூரைகள் எத்தனை ஆபத்தானவை என்ற விழிப்புணர்வு நமக்கும் அரசுக்கும் வருகிறது. மாண்புமிகு முதல்வர் அவர்களது வீட்டிலேயே ஓலைக்கூரை அகற்றப்பட்டு ஓடுகள் பொறுத்தப்பட்டது கும்பகோணம் சோகத்துக்குப்பிறகுதான். என்ன காரணத்தோலோ விபரீதமாக ஏதாவது நடந்த பிறகே அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மெத்தனப்போக்கை அரசும் அரசு அதிகாரிகளும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். ரங்கநாதன் தெருவை அங்குள்ள கடைக்காரர்கள் அத்துமீறி ஆக்ரமித்திருப்பதை நாம் அறிந்து கொள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் தீப்பிடித்து எரிய வேண்டியுள்ளது-அதில் சில தொழிலாளர்கள் உடல் கருக வேண்டியுள்ளது. பொதுமக்களுக்கு ஏற்கனவே பெட்ரோல் விலை உயர்வு, அரிசி விலை உயர்வு, பருப்பு விலை உயர்வு என்று ஏகப்பட்ட கவலைகள். ஆகவே இது போன்ற விஷயங்களுக்காக கொடி பிடிக்கவில்லையே என்று அவர்களைப் பார்த்து கோபப்படுவதில் அர்த்தமில்லை. இந்த சூழ்நிலையில் “வருமுன் காப்போம்” என்ற அடிப்படையில் அரசு கவனம் செலுத்த வேண்டிய சில அதிரடி விஷயங்க...
Image
KALANIDHI MARAN STANDS OUT AS A FILM PRODUCER ENTHIRAN is the most expected movie of the country. The audio release of ENTHIRAN was celebrated in Malaysia on 31 st July 2010. Normally the function what may be if Rajinikanth is on the dais all the speakers will speak in praise of the Super Star Rajinikanth only. If I am right it is for the first time all the dignitaries including the Super Star Rajinikanth, Aiswarya Rai, AR. Rahman, Vairamuthu and Director Shankar who spoke in the Enthiran audio release function were in praise of the Producer of Enthiran, who is none other than Mr. Kalanidhi Maran. For the past few years Film Producers have a feeling that they are not respected by the industry properly. For those producers it was a glorious moment to watch and Film producers should really thank Mr. Maran for not going behind any body in the industry and making the industry to come after him. Bravo Mr. Kalanidhi Maran
கோவிலுக்கு ஒரு பூஜாரி ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற் கும் ஒரு மேலாளர் என்பது போல ஒவ்வொரு கோயிலிலும் பூஜாரி தவிர ஒரு சாமியார் இருந்து கொண்டு குறி சொல்வது, நோய் நொடிகளை தீர்ப்பது போன்ற வேலைகளில் இறங்கி பக்தர்களிடம் பண்ம் பறிப்பது என்பது வாடிக்கையாகி வருகிறது. அரசாங்கம் உடனடியாக இதற்கு ஒரு தீர்வு கண்டாக வேண்டும். குறைந்த பட்சம் சாமியாராவதற்கு அடிப்படைத் தகுதி என்ன என்றாவது தீர்மானம் செய்ய வேண்டும் எந்த வியாபாரம் நன்றாக நடந்தாலும் அந்தத் தொழிலை நாமும் செய்தாலென்ன என்று எல்லோர் மனதிலும் சிந்தனை பிறக்கும். அது போன்று சாமியார் தொழில் நன்றாக இருக்கிறதே என்று பலர் அந்தத் தொழிலில் இறங்குவதற்கு முன் அரசு செயல்பட்டால் இழப்புகள் குறைய வாய்ப்புண்டு
நண்பர்களே, கல்லூரி மாணவன் ஒருவன் சாலை விபத்தில் இறந்தவுடன்தான் காரில் பெல்டபோட்டுக்கொண்டு போக வேண்டும் என்று வலியுறுத்தத்தொடங்குகிறதுகாவல் துறை.இதையெல்லாம் வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் ஏன் செயல் படுததக்கூடாது? வருமுன் காக்க வேண்டியவைகளின் பட்டியல் கீழே: * பள்ளி பிள்ளைகளை ஏற்றி வரும் வேன்களில் அளவுக்கதிகமாக பிள்ளைகளை அடைப்பது * அரசு பஸ்களின் ஓட்டுனர்கள் எந்த சிக்னலையும் மதிக்காமல் பஸ்களைஓட்டுவது * விளம்பர பேனர்களை ஒழித்து விட்டதாக மார் தட்டிக்கொள்ளும் சென்னை மாநகராட்சி அரசியல் வாதிகள் மட்டும் தெருமுனைக்கு தெருமுனை பல்லை இளித்துக் கொண்டிருப்பதை கண்டும் காணாமல் இருப்பது இன்னும் தொடரும்