மறக்க முடியுமா ? 2 நான் விமர்சனம் எழுதிய முதல் திரைப்படம் - சித்ரா லட்சுமணன் தெள்ளூர் தருமராசனின் கடையில் பம்புசெட்டை கடனில் வாங்கிய பல விவசாயிகளிடம் அந்தக் கடனை வசூலிப்பதற்காக நானும் அவரும் சைக்கிளில் போவது வழக்கம். அப்படி பல நாட்கள் பயணம் செய்ததில் அவரோடு எனக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்ட து. விரைவில் சென்னைக்கு சென்று பத்திரிக்கை ஒன்றை ஆரம்பிக்கவிருப்பதாகச் சொன்ன அவர் சென்னைக்கு சென்றபோது என்னையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். அப்போது கதாசிரியர் மா.ரா அவர்கள் ஜெய்சங்கர்-கே.ஆர்.விஜயா ஜோடியாக நடிக்க தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனரான கே எஸ் சேதுமாதவன் இயக்கத்திலே பால்மனம் என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார். பால்மனம் படத்திலும் பாடல்கள் எழுத தருமராசனுக்கு வாய்ப்பு தந்திருந்தார் மா.ரா. அந்தப் பாடல்களுக்கு இசையமைத்தவர் பார்த்தசாரதி.இவர்தான் எண்பதுகளின் இறுதியில் எக்கோ என்ற இசை நிறுவனத்தின் மூலம் இளையராஜாவின் பாடல்கள் அனைத்தையும் வெளியிட்டவர். மா.ரா.அவர்களின் அலுவலகம் அப்போது தியாகராய நகர் ஹபிபுல்லா சா...
Posts
Showing posts from April, 2017
- Get link
- X
- Other Apps
மறக்க முடியுமா? 1 -சித்ரா லட்சுமணன் எல்லா நதிகளையும் போல மனிதனின் வாழ்க்கையும் ஒரு புள்ளியில்தான் தொடங்குகிறது. அந்தப் புள்ளி எப்படி மாறினாலும் மறக்க முடியாத பல அனுபவங்களை அது விதைத்துவிட்டுப் போகிறது என்பது மட்டும் உண்மை. ஆரணி என்ற ஊரில் ஒரு பம்புசெட் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நான் ஒரு பத்திரிகையாளனாகவும், திரைப்படத் தயாரிப்பாளனாகவும், இயக்குனராகவும்,நடிகனாகவும் உருவெடுப்பேன் என்று கனவு கூட கண்டதில்லை.ஆனாலும் இவைகள் எல்லாம் என் வாழ்வில் நடைபெற்றன. இந்த மாற்றங்களைப் பெற்ற போது நான் சந்தித்த மனிதர்கள், எனக்குக் கிடைத்த அனுபவங்கள்,அவமானங்கள் எல்லாமே மறக்க முடியாதவை. அந்த அனுபவங்களைத்தான் வாரம் தோறும் தினமலர் வாசகர்களாகிய உங்களோடு மறக்க முடியுமா என்ற தலைப்பில் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன் சினிமாவோடு எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு குடும்பம் என்னுடைய குடும்பம். என்னுடைய தந்தை ராமசாமி ஒரு பள்ளி ஆசிரியர். என் தாயார் சீதாலட்சுமி படிப்பு வாசனை இல்லாத குடும்பத் தலைவி. மூத்த சகோதரரான கிருஷ்ணமூர்த்தி காவல்...