
கலைஞரைக் காதலித்த கவியரசர் கண்ணதாசன் – சித்ரா லட்சுமணன் அபிமன்யு படத்தில் எம்.ஜி.ஆர். மாடர்ன் தியேட்டர்ஸ் நடத்திக் கொண்டிருந்த “சண்ட மாருதம்” என்ற பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றச் சென்றபோதுதான் அந்த நிறுவனத்தோடு கவிஞர் கண்ணதாசனுக்கு முதல் முதலாக தொடர்பு ஏற்பட்டது சேலத்திலே சண்டமாருதம் பத்திரிகையில் பணியாற்றிய போது முதன் முதலாக நாவலர் நெடுஞ்செழியனைப் பார்க்கவும் அவரது பேச்சைக் கேட்கவும் கண்ணதாசனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு கூட்டத்திலே பேசிய நெடுஞ்செழியனின் பேச்சு அவரைப் பெரிதும் கவர்ந்தது. அதற்குப் பிறகு நேரடியாக இல்லை என்றாலும் ஒரு விதத்தில் சண்டமாருதம் பத்திரிகையில் கண்ணதாசன் தனது வேலையை இழப்பதற்கும் அந்த பத்திரிகையே மூடப்படுவதற்கும் நெடுஞ்செழியன் காரணமாக அமைந்தார் நாவலர் நெடுஞ்செழியன் எழுதியிருந்த கட்டுரை ஒன்று அப்போது ஒரு பத்திரிகையில் வெளிவந்திருந்தது அந்தக் கட்டுரை கண்ணதாசனை மிகவும் கவர்ந்ததால் அதை சண்டமாருதம் பத்திரிகையில் மறுபிரசுரம் செய்ய விரும்பிய அவர் அச்சுக் கோப்பவரிடம் அந்த கட்டுரையை வெட்ட...