Posts

Showing posts from 2013

எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதிய கடிதம்

Image
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த தின சிறப்புக் கட்டுரை எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதிய சிவாஜி –சித்ரா லட்சுமணன் 2013 அக்டோபர் 1ஆம் தேதி நடிகர் திலகத்தின் 85வது பிறந்த நாள் விழா. அவரோடுதான் எனக்கு எத்தனையெத்தனை அனுபவங்கள்                           ”நடிகர் திலகம் சிவாஜி என்ற மகா கலைஞனோடு ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கையாளன், பத்திரிகைத் தொடர்பாளன்,உதவி இயக்குநர், தயாரிப்பாளர் என்று பல தகுதிகளில் இணைந்து பணியாற்றக்கூடிய அரிய   வாய்ப்பு பெற்றவன் நான். 1970 தொடங்கி 15 ஆண்டுகள் நான் நடத்திய “திரைக்கதிர்” பத்திரிகை அதன் ஆரம்பக்கட்டங்களில் சிவாஜி ரசிகர்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிக்கையாக வெளிவந்தது. இதழ்கள் தோறும் ரசிகர்களின் கேள்விகளுக்கான சிவாஜியின் பதில்கள், சிவாஜியின் டைரி என்ற பெயரில் மாதம் முழுவதும் சிவாஜி கலந்து கொள்ளும் படப்பிடிப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளின் தொகுப்புகள், சிவாஜி படச் செய்திகள் என்று   முழுக்க முழுக்க சிவாஜி பற்றிய செய்திகளே அந்த இத...